அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ!
மைதானத்தில் அக்சர் படேல் காலில் விழுந்த விராட் கோலி காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விராட் கோலி
சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. அதன்படி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று மோதினர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனையடுத்து 250 எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை கொடுக்காமல், நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார்.
வைரல் வீடியோ
அப்போது இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தார்.இதனைப் பார்த்த இந்திய அணி வீரர்கள் அவரை கட்டிப்பிடிக்க ஓடி வந்தனர். அப்போது விராட் கோலி ஓடிவந்து அக்சர் படேலின் காலில் விழுந்தார்.
இதனைச் சுதாரித்துக் கொண்ட அக்சர் விராட்டின் கைகளைப் பிடித்துக் கொண்டு மைதானத்தில் அமர்ந்தார். இந்த வீடியொ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.