கோலி செய்த செயல்; ஆர்சிபி அணியவே முடிச்சுவிட்டிங்க - மோசமான சாதனை
விராட் கோலி செய்த ஒரு தவறு தான் ஆர்சிபி தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
விராட் கோலி
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பில் சால்ட் மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக ஆடினர்.
அப்போது அக்சர் படேல் வீசிய நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தை பில் சால்ட் கவர் திசையில் அடித்தார். இருவருமே ஃபீல்டர் பந்தை எடுத்து விட்டதை பார்த்து விட்டனர். விராட் கோலி மீண்டும் தனது இடத்துக்கே ஓடினார். பில் சால்ட் திரும்பி ஓட முயன்றார்.
ஆர்சிபி தோல்வி
அப்போது கால் தடுமாறி அவர் கீழே விழுந்து விட்டார். அங்கிருந்து எழுந்து அவர் மீண்டும் க்ரீஸை நோக்கி ஓடுவதற்குள் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் அவரை ரன் அவுட் செய்து விட்டார். இதை அடுத்து விராட் கோலி தான் அந்த ரன்னை ஓடி இருக்க வேண்டும். பில் சால்ட்டை அவர் ரன் அவுட் செய்துவிட்டார் என சர்ச்சை வெடித்தது.
ஆனால் பந்து நிச்சயம் ஃபீல்டரை தாண்டி சென்று விடும் என்ற எண்ணத்தில் தான் இருவரும் ஓடினார்கள். எனவே, இந்த ரன்னை ஓடியதில் இருவருக்குமே பங்கு உள்ளது. விராட் கோலி மீது மட்டுமே தவறும் இல்லை என்றே விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக இதுவரை ஐபிஎல் தொடரில் கோலி 32 முறை ரன் அவுட்களில் கோலி காரணமாக இருந்துள்ளார். அதில் 24 முறை எதிரில் நின்ற பேட்ஸ்மேன்கள் அவுட் ஆக, கோலி 8 முறை அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.