அப்படி ஒருத்தர் இந்திய அணிக்கு தேவையே இல்லை - கோபத்துடன் கூறிய விராட் கோலி

Virat Kohli Test championship match
By Petchi Avudaiappan Jun 03, 2021 12:02 PM GMT
Report

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களிடம் தான் கறாராக ஒரு விஷயத்தை கூறியதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 18ம் தேதி நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அடுத்த சில தினங்களில் இங்கிலாந்திற்கு செல்ல உள்ள நிலையில் பலரும் தங்களது கருத்துக் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி தான் வெல்லும் என்று நினைத்துக்கொண்டே இருவரும் விமானத்தில் ஏற வேண்டாம் என்று தான் கறாராக கூறியதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் வெற்றிக்காகவும் முழு முயற்சியுடன் கடைசி வரை போராடுவோம் . என்றும் அவர் கூறியுள்ளார்.