கோலியின் இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள்..அவரும் மனுசன் தான் - முன்னாள் வீரர்

Virat Kohli T20 World Cup
By Thahir Oct 23, 2021 01:32 PM GMT
Report

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ஆவேசம் காட்டியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் மோதும் போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் வரும் அக்டோபர் 24ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு வாழ்வா? சாவா? தொடர் போன்று அமைந்துள்ளது.

இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றுக்கொடுக்காத கேப்டன் கோலி, இந்த டி20 உலகக்கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எனவே அவர் கோப்பையை வென்றுக்கொடுத்து விட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் கோலியின் நிலைமை குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.

அதில், அனைவரும் விராட் கோலி எப்போதும் ரன் அடிக்க வேண்டும் என நினைக்கிறோம். அவர் மனிதர் தான், இயந்திரம் அல்ல ரன்களை குவித்துக்கொண்டே இருப்பதற்கு.

அவர் களத்தில் எப்படி ரன் அடிக்க முற்படுகிறார் என்பது அனைவருக்குமே தெரியும். எதிரணி வீரர்களுக்கு கலக்கத்தை கொடுக்கக்கூடிய வீரர் அவர்.

அவர் ரன் அடிக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் முதலில் அவர் ரன் அடிப்பார் என நம்ப வேண்டும். ஏனென்றால் அவருக்கும் தெரியும், கேப்டனாக வழிநடத்த வேண்டும் என்று.

அவருக்கு எனது சார்பில் எந்த அட்வைஸும் கொடுக்க மாட்டேன். கோலி என்ன செய்ய நினைக்கிறாரோ, அதனை செய்யட்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் தொடர் நடந்துமுடிந்துள்ளது. எனவே இந்திய வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்திய இளம் வீரர்களுக்கு நல்ல உத்வேகம் உள்ளது. எனவே நிச்சயம் இந்த முறை கோலி கோப்பையை வென்று கொடுக்க நினைப்பார்.

ஆனால் டி20 உலகக்கோப்பை என்பது வேறு. இங்கு ஒரே ஒரு வீரர் கூட 10 நிமிடத்தில் ஆட்டத்தையே மாற்றி அமைக்கலாம்.

எனவே யார் கோப்பையை வெல்வார்கள் என்பது முன்கூட்டியே இருக்க முடியாது. நிறைய நல்ல அணிகள் உள்ளன. எனவே ரசிகர்கள் அதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

கோலியின் உலகக்கோப்பை கனவை நிறைவேற்ற ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் உதவியாக இருப்பார்கள்.

எதிரணி பேட்டிங்கை கட்டுப்படுத்த பும்ராவால் முடியும். அவரால் டெத் ஓவர்களில் வீசப்படும் சில பந்துகளால் ஆட்டத்தை மாற்ற முடியும்.

பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா முக்கிய பங்கு வகிப்பார். பவர் ப்ளே ஓவர்களில் ரோகித் சர்மா அதிக ரன்களை குவிக்கக்கூடியவர். அதே போல ஃபினிஷராக ஹர்திக் பாண்ட்யா இருப்பார் என ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.