உலகக்கோப்பைக்கு பிறகு டி20 போட்டியிலிருந்து விராட் கோலி ஓய்வு? - வெளியான தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி
உலகக்கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் போட்டியிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். இவர் சமீபமாக தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
ஆனால் அவரின் போதாத நேரம் என்பது போல சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ள அவர் நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 6 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ள கோலி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார்.
3 போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனாலும் அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த அவர் தற்போது ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.
டி20 போட்டியில் இருந்து கோலி ஓய்வு?
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 35 ரன் மட்டுமே எடுத்தார். ஆனால், இவர் எடுத்த ரன் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவரது ஆட்டம் முன்பு போல இல்லை என்று தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
தன்னுடைய பேட்டிங்கை சீர் செய்ய அவர் ஏதாவது ஒரு வகையான போட்டியில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளது. 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை போட்டிக்குப் பிறகு விராட் கோலியை 20 ஓவரிலிருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான வீரர்கள் உள்ளதால் விராட் கோலி இடம்பெறுவது தற்போது கேள்வி குறியாகியுள்ளது.