கோலிக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் - வீரர்களுக்கு சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்

Virat Kohli Suresh Raina T20 World Cup
By Thahir Oct 18, 2021 06:36 AM GMT
Report

டி20 உலக கோப்பை போட்டியில் வீரர்கள் உத்வேகமாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய அணி வீரர்களை சுரேஷ் ரெய்னா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய அணியின் டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் டி20 உலக கோப்பை 2021 ஆம் ஆண்டோடு விராட் கோலி விலக உள்ளதால் இந்திய அணி வீரர்கள் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.

இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 'கோலிக்காக வீரர்கள் உத்வேகமாக விளையாடி கோப்பையை வெல்லவேண்டும். ஏனென்றால் கேப்டனாக கோலிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை.

இந்த உலகக்கோப்பை தொடரில் துருப்பு சீட்டாக இருக்கப்போகும் மூன்று வீரர்கள் கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிதான்.

இவர்கள் பெரும்பாலான ஓவர்களை விளையாடினால் வெற்றி எளிதாகும்' எனக் கூறியுள்ளார்.