“யாரு சாமி நீ... இப்படி விளையாடுற?” - ஒற்றை கேட்ச் மூலம் தரமான பதிலடி கொடுத்த விராட் கோலி
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி பிடித்த ஒரு கேட்ச் கிரிக்கெட் உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 66 ரன்களும், மேக்ஸ்வெல் 55 ரன்களும் குவித்தனர்.
What A Catch Virat Kohli...❤️
— H Y P E R... (@Freak_HypeR_) April 16, 2022
Its A Superman...?#DCvRCB #RCBvDC #ViratKohli #IPL2022 pic.twitter.com/mHigstq4B6
இதனை தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. அந்த அணியில் டேவிட் வார்னர் 66, ரிஷப் பண்ட் 34 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ரிஷப் பண்ட் 34 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, சிராஜ் வீசிய பந்தை பவுண்டரியை நோக்கி விளாசினார். ஆனால் நடுவில் ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்த விராட் கோலி அதனை ஒற்றைக் கையால் கேட்ச் செய்து அசத்தினார். இதனை அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.