T20 Captaincy: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில்விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
33- வயதான விராட் கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால் ஏற்பட்டு இருக்கும் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் விராட் கோலி, கேப்டன் பொறுப்பை துறக்கலாம் என்று செய்தி வெளியான நிலையில் இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக வீரட் கோலி விலகுவதாக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனது இந்த முடிவு குறித்து அவர் விரிவான விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் கேப்டன் பொறுப்பை ஏற்பதாகவும், அதன் பின் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குபின் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.