‘என்னையும், விராட் கோலியையும் ஒப்பிடாதீங்க.. அது எனக்கு பிடிக்கல...’ - ஸ்மிருதி மந்தனா கருத்து
‘என்னையும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பேச வேண்டாம்’ என்று இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கருத்து தெரிவித்துள்ளார்.
Ind vs Aus 3 ஒருநாள் போட்டி -
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் விராட் கோலி கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
விராட் கோலி மாபெரும் சாதனை
சமீபத்தில் விராட் கோலி, 164 நாட்களில் 1000 ரன்கள் குவித்து விராட் கோலி சாதனைப் படைத்தார். மேலும், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் செப்டம்பர் 8ம் தேதி 24000 ரன்களை எடுத்தார். தற்போது, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 5 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் 1000 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார். இதனையடுத்து, 25,000 சர்வதேச ரன்களை எட்டிய 6து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஸ்மிருதி மந்தனா கருத்து
என்னையும் விராட் கோலியையும் ஒப்பிடுவது இந்நிலையில், என்னையும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பேசுவது பிடைக்கவில்லை என்று WPL பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
என்னையும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கோலி பல சாதனைகளை படைத்திருக்கிறார். நானும் அத்தகைய சாதனைகளை படைப்பேன் என்று நம்புகிறேன். அதற்கு நீண்ட காலம்கும். பெங்களூரு அணிக்காக பல விஷயங்களை விராட் கோலி சாதித்திருக்கிறார். அதையே, நானும் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
Smriti Mandhana reacts to comparisons with Virat Kohli at RCB.#SmritiMandhana | #RCB | #ViratKohli pic.twitter.com/Ffn6C4cCRr
— CricTracker (@Cricketracker) March 5, 2023