பேட்டிங் தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட விராட் கோலி - முதல் இடம் யாருக்கு தெரியுமா?
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஐசிசி வெளியிட்ட பேட்டிங் தரவரிசையில் 901 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், 891 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் 2 ஆம் இடத்திலும், 878 புள்ளிகளுடன் மார்னஸ் லபுஷேன் 3 ஆம் இடத்திலும், 846 புள்ளிகளுடன் ஜோ ரூட் 4 ஆம் இடத்திலும், 791 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் கோலி 5ம் இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் சொதப்பியதால் அவர் இறக்கம் கண்டுள்ளார்.
இதேபோல் பவுலிங் தரவரிசையில் 908 புள்ளிகளுடன் பாட் கமின்ஸ் முதலிடமும், அஸ்வின் 2ஆம் இடத்திலும், 3ஆம் இடத்தில் டிம் சவுதியும், 4ஆம் இடத்தில் ஜோஷ் ஹேசில்வுட்டும், 5ஆம் இடத்தில் நீல் வாக்னரும், 6ஆம் இடத்தில் ரபாடாவும் 7ஆம் இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் 8ஆம் இடத்தில் பிராடும், 9ஆம் இடத்தில் பும்ராவும், 10ஆம் இடத்தில் மிட்செல் ஸ்டார்க்கும் உள்ளனர்.