விராட் கோலி கேப்டன் பொறுப்பை விட வேண்டும் - அறிவுரை வழங்கிய அஃப்ரிடி

Virat Kohli Shahid Afridi Advise
By Thahir Nov 13, 2021 03:24 PM GMT
Report

விராட் கோலி பேட்ஸ்மேனாக மட்டுமே தொடர வேண்டும், கேப்டன் பொறுப்பை இனி ஏற்க கூடாதென பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

டி 20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ள நிலையில் , அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வருகிறது.

இதில் , இந்தியஅணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விராட் கோலி , முகமது ஷமி , பும்ரா , ரவிந்திரா ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணியின் கேப்டன்ஷிப் மாற்றம் குறித்தும், விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் அதிகம் பேசப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் , விராட் கோலி , ரோகித் சர்மா உள்ளிட்டவை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் கிடையாது என கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது அவரை அறிவேன் என்றும்,

அவர் பார்ப்பதற்கு அமைதியாகத்தான் இருப்பார், தேவை ஏற்படும்போது ஆக்ரோஷமாக விளையாடி அணியை வழி நடத்துவார் என கூறியுள்ளார்.