164 நாட்களில் 1000 ரன்கள் குவித்து விராட் கோலி மாபெரும் சாதனை.. - குவியும் வாழ்த்துக்கள்...!

Virat Kohli Cricket Indian Cricket Team
By Nandhini Feb 20, 2023 08:30 AM GMT
Report

164 நாட்களில் 1000 ரன்கள் குவித்து விராட் கோலி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

virat-kohli-scored-1000-runs-in-last-5-months

விராட் கோலி மாபெரும் சாதனை

இந்நிலையில், 164 நாட்களில் 1000 ரன்கள் குவித்து விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் செப்டம்பர் 8ம் தேதி 24000 ரன்களை எடுத்தார், இப்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 5 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் 1000 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதனையடுத்து, 25,000 சர்வதேச ரன்களை எட்டிய 6து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.