அடுத்த இந்திய அணி கேப்டன் இவர்தான் - விராட் கோலி சொன்ன பதிலால் அதிர்ச்சி
இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்பதற்கு தற்போதைய கேப்டன் விராட் கோலி சூசகமாக பதில் அளித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று நமீபியாவுடன் விளையாடி வருகிறது.
இப்போட்டியுடன் இந்திய டி20 அணிக் கேப்டன் விராட் கோலி தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். அதனால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் பேசிய விராட் கோலி, முதலில் பந்துவீச விரும்புகிறோம். டாஸ்தான் மிகமுக்கியமானது. கடைசி சில போட்டிகளில் வென்றோம். முதல் போட்டியிலிருந்தே வெற்றி கணக்கை தொடர முடியவில்லை. இந்திய அணி கேப்டனாக என்னால் முடிந்த பங்களிப்பை வழங்கினேன்.
இந்திய டி20 அணியை முன்னோக்கி நகர்த்திச் செல்ல, ரோகித் அடுத்த நபராக இருக்கலாம். இந்திய அணி சரியான நபரின் கையில்தான் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான் என்பது உறுதியாகியுள்ளது.