நான் நம்பிக்கை இழந்து விட்டேன்.... விராட் கோலி கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

Virat Kohli TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 11, 2022 09:40 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி சொன்ன கருத்து ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஆனால் அவரின் போதாத நேரம் என்பது போல நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். 

ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ள அவர் நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 6  முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ள கோலி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். 

இதில் மூன்று போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனாலும் அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வருகிறது. இந்நிலையில் தான் 2வது முறையாக டக் அவுட் ஆன போது நம்பிக்கை இழந்து விட்டேன். இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் அனுபவத்தில் இப்படி ஒரு போதும் நடந்ததே இல்லை எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.