ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அசால்ட்டாக முறியடித்தார் விராட் கோலி

Record virat kohli Breaking sachin tendulkar
By Nandhini Jan 20, 2022 05:30 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் அடித்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்தெறிந்திருக்கிறார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் 296 ரன்கள் அடிக்க, இந்திய அணி 297 ரன்களை விரட்டி வருகின்றது.

297 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டி வரும் இந்திய அணியில், விராட் கோலி ஒரு கேப்டனாக ஆடாமல், வெறும் பேட்ஸ்மேனாக ஆடிய விராட்கோலி, தவானுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் அடித்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்க முடியாமல் திணறி வந்த விராட் கோலியிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கோலி சதம் அடிக்கவில்லை; ஆனால் அரைசதம் அடித்துள்ளார். 51 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்தார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை ஒவ்வொன்றாக தகர்த்துவரும் விராட் கோலி, இப்போது மற்றுமொரு சாதனையை தகர்த்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் வெளிநாடுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் 5065 ரன்கள் அடித்துள்ளார். வெளிநாடுகளில் சச்சின் டெண்டுல்கர் ஆடிய 147 ஒருநாள் போட்டிகளில் 5065 ரன்கள் அடித்திருக்கிறார்.

இச்சாதனையை வெறும் 108 போட்டிகளில் தகர்த்துவிட்டார் கோலி. வெளிநாடுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் குமார் சங்கக்கரா (5518 ரன்கள்) மற்றும் 2ம் இடத்தில் ரிக்கி பாண்டிங் (5090 ரன்கள்) ஆகிய இருவரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்ததாக 3ம் இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.