திருந்தாத முட்டாள் ரசிகர்கள் - விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மகள் குறித்து பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் படுதோல்வியடைந்து கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அணியின் மோசமான பேட்டிங், பீல்டிங், பௌலிங் ஆகியவற்றால் ரசிகர்கள் வீரர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். பலர் இது குறித்து தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியால் இந்திய அணி வீரர் முகமது ஷமி மதரீதியாக தாக்கப்பட்டார். இதற்கு முன்னால் என்னால் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி ரசிகர்கள் சிலரால் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு வாமிகா என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. அவர் இதுவரை குழந்தையின் முகத்தை கூட வெளியுலகிற்கு காட்டாமல் இருந்து வருகிறார். அந்தப் பிஞ்சு குழந்தை குறித்து சமூக வலைதளங்களில் சிலர் மோசமாகவும், சிலர் பாலியல் ரீதியான மிரட்டல் விடுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த எழுந்த டெல்லி மகளிர் ஆணையம், டெல்லி போலீஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கோலியின் குழந்தை மீதான பாலியல் மிரட்டல் வெட்கக்கேடானது. அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை, முதல் தகவல் அறிக்கை, கைது செய்யப்பட்டவர்கள் விவரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதனால் இந்த பிரச்சினையில் ரசிகர்கள் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.