இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலின் சம்பளம் குறைப்பா? கொந்தளித்த ரசிகர்கள்
கேப்டன் பதவியில் மாற்றம் ஏற்பட்ட பின்னர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் சம்பளம் எவ்வளவு மாறியுள்ளது என ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனால் பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.
விராட் கோலிக்கு விருப்பம் இல்லை என தெரிவித்த போதும், பிசிசிஐ பிடிவாதமாக இந்த முடிவை எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
விராட் கோலிக்கு விருப்பம் இல்லை என தெரிவித்த போதும், பிசிசிஐ பிடிவாதமாக இந்த முடிவை எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கோலியின் விவகாரம் குறித்து பதிலளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தனி தனி கேப்டன் இருந்தால் பிரச்னை ஏற்படும்.
அதற்காக தான் டி20 கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கேட்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இதன் விளைவு தான் தற்போது நடந்துள்ளது என கூறினார்.
இந்நிலையில் கேப்டன் பதவி மாற்றத்திற்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மதிப்பு என்ன? அவர்களின் சம்பளம் மாற்றம் எவ்வளவு என அதிகளவில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
மேலும் விராட் கோலியின் ஊதியம் குறைக்கப்பட்டு, ரோகித் சர்மாவுக்கு அதிகப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அப்படி ஏதுமே நடைபெறவில்லை.
பிசிசிஐ-யை பொறுத்தவரை ஆண்டு தோறும் வருடாந்திர ஊதிய ஒப்பந்தம் போடப்படும். அதில் ஏ பிரிவு, ஏ+ பிரிவு என பல வகைகளாக வீரர்கள் பிரிக்கப்படுவார்கள்.
அந்தவகையில் தற்போது பிசிசிஐ-ன் முதன்மை பிரிவான ஏ+ல் தான் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை.
பிசிசிஐ-ன் ஊதியத்தில் மாற்றம் இல்லையென்ற போதும், அவர்கள் இருவரின் சந்தை மதிப்பில் பெரும் வித்தியாசத்தை பார்க்கலாம்.
தற்போது கோலி கேப்டன் பதவியில் இல்லாததால் அவரின் பிராண்ட் மதிப்பு குறைந்து விளம்பர தொகைகள் குறையலாம்.
இதே போல ரோகித் சர்மாவுக்கு ஏற்கனவே மும்பை அணி கேப்டன் என்ற முறையில் சந்தை மதிப்பு உள்ளது. இதில் தற்போது இந்திய அணியும் கேப்டன் பதவியும் இணைந்திருப்பதால் பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.