கோலியின் பிறந்த நாள்... - கலந்து கொள்ளாத ரோகித் ஷர்மா - வெளியான தகவலால் சந்தேகத்தில் ரசிகர்கள்...!
கோலியின் பிறந்த நாளின் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மட்டும் கலந்து கொள்ளாத சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி பிறந்தநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உற்சாகமாக கொண்டாடிய அணி வீரர்கள்
இன்று விராட் கோலியின் பிறந்த நாளை விழாவில் இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது, விராட் கோலி ஸ்பெஷலாக கேக்கை எடுத்து பேடி உப்டானுக்கு ஊட்டினார். தற்போது, பேடி உப்டானுடனும் இணைந்து விராட் கோலி பணியாற்றி வருகிறார்.
இதனால், விராட் கோலியின் மனஅழுத்தம் விலகி, தற்போது தான் பழைய விராட் கோலியாக திரும்பியுள்ளார்.
கலந்து கொள்ளாத ரோகித் ஷர்மா
இந்நிலையில், விராட் கோலியின் பிறந்தநாள் கேக் கட்டிங் நிகழ்ச்சியில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் கலந்து கொள்ளவில்லை. விராட் கோலியின் பிறந்த நாள் விழாவில் ரோகித் சர்மா மட்டும் பங்கேற்காத விஷயம் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோகித்தை தவிர மற்ற அனைத்து வீரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
ரோகித் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. விராட் கோலி பிறந்த நாள் நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா கலந்து கொள்ளாத சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cake ? cutting ✂️ in @imVkohli ❤️ https://t.co/47RD8nvJfm
— wear a mask.. stay safe, India??? (@deepakkrdipu10) November 5, 2022