Wednesday, Jul 9, 2025

வெளியான தரவரிசை பட்டியல் - விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ரோஹித் சர்மா...!

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team
By Nandhini 3 years ago
Report

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மா 2ம் இடத்தைப் பிடித்துள்ளார். 

20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது.

இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

virat-kohli-rohit-sharma-india-cricket-team

விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ரோஹித் சர்மா

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா 2ம் இடத்தை பிடித்துள்ளார்.

விராட் கோலி தலைமையில், இந்திய அணி 32 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், ரோஹித் சர்மா தலைமையில் 33 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும், முதல் இடத்தை தோனி தக்க வைத்துள்ளார்.