விராட் கோலியை ஓரம் கட்டிய ரோகித் சர்மா

Virat Kohli Rohit Sharma INDvsENG ICC rankings
By Thahir Sep 02, 2021 09:17 AM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டிக்குப் பின் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

விராட் கோலியை ஓரம் கட்டிய ரோகித் சர்மா | Virat Kohli Rohit Sharma Icc Rankings

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் முறையே 2, 3 மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளனர்.

கோஹ்லி தரவரிசையில் பின்னோக்கி செல்ல அவரின் மோசமான ஆட்டமும் மற்றும் அணியினரை சரியாக வழி நடத்தாததுமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.