இந்தியா தோல்வி... - கண்கலங்கிய ரோஹித் - விராட் கோலி - Heart breaking புகைப்படம் வைரல்...!
இன்று நடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்வி அடைந்ததால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி கண்கலங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தியா தோல்வி
டி20 உலகக்கோப்பையில் இன்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. இதனையடுத்து, அந்த அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதன் பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் 5 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து, பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது. இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதனையடுத்து, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
கண்கலங்கிய ரோகித் ஷர்மா - விராட் கோலி
இந்நிலையில், இன்று நடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி தோல்வி அடைந்தது.
அப்போது, ரோகித் சர்மா மனம் உடைந்து அழுதுள்ள புகைப்படங்களும், விராட் கோலியின் கண்கள் சற்று கலங்கியபடி மைதானத்திலிருந்து வெளியேறிய புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தங்களது சோகத்தை கமெண்ட்டுக்களாக பதிவிட்டு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Feel for Team India. pic.twitter.com/ZhOpTl2Oab
— Johns. (@CricCrazyJohns) November 10, 2022
Heartbreaking pictures from India's loss, this World Cup really felt close. ? pic.twitter.com/yq4ppLgXU1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 10, 2022
Feel for Virat Kohli. He gives everything in this T20 World Cup and now result lost in Semifinal. He scored 296 runs with 98+ average, 4 fifties, 2 MOM awards and magical 82*. This guy deserves Trophy but once again India lost in semi. Nevertheless Virat, you Played Amazing. pic.twitter.com/4kKFkhiErz
— CricketMAN2 (@ImTanujSingh) November 10, 2022