கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடதான் நினைத்தார்; ஆனால்.. போட்டுடைத்த முகமது கைஃப்
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே விரும்பியதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ஓய்வு
விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்,
"விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்பி இருக்கலாம். நிச்சயமாக பிசிசிஐ-யில் இது குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தை நடந்திருக்கும்.
முகமது கைஃப் தகவல்
தேர்வுக் குழுவினர் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சரியாக விளையாடாததைச் சுட்டிக்காட்டி இருப்பார்கள். அணியில் அவருக்கான இடம் இனியும் இல்லை என்பதை கூறி இருப்பார்கள். அங்கே என்ன நடந்தது என நமக்கு எப்போதும் தெரியப் போவதில்லை.
திரைக்குப் பின்னே என்ன நடந்தது என நாம் ஊகிப்பது மிகவும் கடினம். கடைசி நிமிட முடிவின்படி விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினார். அவர் நிச்சயமாக அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்றுதான் நான் நினைத்தேன்.
ஆனால், கடந்த சில வாரங்களாக நடந்த விஷயங்கள் மூலம் பிசிசிஐ-யின் ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை, தேர்வுக் குழுவினரும் அவரை ஆதரிக்கவில்லை என்பது நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் அவர் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.