பிரபல பாலிவுட் பாடகர் பங்களாவில் விராட் கோலி உணவகம் தொடங்குகிறார்...!
பிரபல பாலிவுட் பாடகர் பங்களாவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உணவகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி
இந்திய வரலாற்றில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 100-வது போட்டியில் விளையாடும் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தொடங்கிய கோலி இதுவரை டி-20, 99 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இதுவரை அவர் விளையாடியுள்ள 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3,308 ரன்களை குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் விராட் கோலி பங்கேற்று விளையாடி வருகிறார்.
உணவகம் தொடங்குகிறார் விராட் கோலி
இந்நிலையில், மும்பையில் உள்ள மறைந்த பாலிவுட் பாடகர் கிஷோர் குமாரின் பங்களாவில் விராட் கோலி உயர்தர உணவகத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் தெரிவித்துள்ளார். இந்த உணவகம் எந்த நேரத்திலும் திறக்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.