லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கோம்..ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி
நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூர் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
ஐபிஎல் டி 20 தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலமையிலான பெங்களூர் அணியும் மோதின.
பஞ்சாப் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.இதன் மூலம் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றது.
இந்தநிலையில், கடுமையான போராட்டத்திற்கு பிறகு ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கால் பதித்த பெங்களூர் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
அதே போல் பெங்களூர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.