மின்னல் வேகத்தில் வந்த பந்து அரண்டு போன விராட் கோலி

Thahir
in கிரிக்கெட்Report this article
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி 25 ரன்களும், தேவ்தட் படிக்கல் 40 ரன்களும் எடுத்து கொடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த டேனியஸ் கிரிஸ்டியன் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். சீனியர் வீரரான டிவில்லியர்ஸ் 23 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினாலும்,
கடந்த இரண்டு போட்டிகளை போலவே இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் மொய்ஸஸ் ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.