டிரெஸ்ஸிங் ரூம் கதவை ஓங்கி குத்து விட்ட விராட் கோலி .. காரணம் என்ன ? - வைரலாகும் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவுட்டானதால் கோபத்தில் டிரெஸ்ஸிங் ரூம் கதவை வேகமாக குத்தியது வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி செஞ்சூரி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் 96 பந்துகளுக்கு 44 ரன்கள் குவித்து அவுட்டானார்.
Virat Kohli, come back soon King.#ENGvIND pic.twitter.com/ffgRH64FvH
— Neelabh (@CricNeelabh) September 5, 2021
மொயின் அலி ஓவரில் விராட்டின் பேட்டில் பட்ட பந்து ஸ்லிப் ஃபீல்டரின் கைகளில் தஞ்சமடைய அவுட்டானார் விராட் கோலி
அந்த விரக்தியில் பெவிலியன் திரும்பியதும் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கதவை ஓங்கி ஒரு 'பன்ச்' கொடுத்துள்ளார். அந்த காட்சி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.
தீபச்செல்வனின் தடுத்து வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை விடுவிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் உத்தரவு IBC Tamil
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil