பொங்கியெழுந்த விராட் கோலி - மகள் மீது விமர்சனம் வைத்ததால் வெளிவந்த உண்மை
கேப்டன்சி சர்ச்சையில் விராட் கோலியின் மகள் மீது குற்றச்சாட்டுக்கள் பரவ தொடங்கியதால் அவர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தன்னிடம் இருந்த ஒருநாள் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித்திடம் வழங்கப்பட்டதால் விராட் கோலி அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா பங்கேற்றால் தான் விளையாட மாட்டேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தை அதிர வைத்தது.
இதுஒருபுறமிருக்க ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டுள்ளதால் விராட் கோலி ஒருநாள் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவிக்காமல் இருக்கிறார் என்ற தகவலும் பரவ ஆரம்பித்தது. ஆனால் ஒருநாள் போட்டித் தொடர் ஜனவரி 11 ஆம் தேதியையும் தாண்டி நடக்கிறது.

அன்றைய தினம் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோரின் மகள் ‘வாமிகாவி'ன் பிறந்தநாள் ஜனவரி 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தான் இந்திய அணியின் தொடரை கோலி புறக்கணிக்க உள்ளதாக விளக்கம் தரப்பட்டது.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒருநாள் போட்டி தொடரில் நான் கண்டிப்பாக இருப்பேன் எனக்கூறியுள்ளார். மேலும், சில நிகழ்ச்சிகளுக்காக ஒருநாள் போட்டியை நான் புறக்கணிக்கிறேன் என்று வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது. அதனை கூறியவர்கள் விளக்கமளித்தே ஆக வேண்டும் என கோலி அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணை படி, ஜனவரி 12ம் தேதியன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும். அந்த போட்டி விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகும். எனவே மகளின் பிறந்தாளுக்காக அன்றைய தினம் நிச்சயம் ஒரு சதத்தை பரிசாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.