“ப்பா..இப்படி ஒரு இன்னிங்ஸை நான் பார்த்ததே இல்லை” - பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரரை புகழ்ந்த கோலி!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களில் இருந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணி இடையேயான எலிமினேட்டர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.பெங்களூர் அணியில் ராஜட் படித்தர் 112 ரன்களும் தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் எடுத்தனர்.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் டி காக் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதன்பின் வந்த மனன் வோஹ்ரா 19 ரன்னிலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 26 பந்துகளில் 45 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இந்நிலையில் அதிரடியாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 19 வது ஓவரில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்த லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
லக்னோ அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறி, வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ள உள்ளது.
? ? "Haven't seen many better innings than the one Rajat played."
— IndianPremierLeague (@IPL) May 26, 2022
DO NOT MISS: @imVkohli chats with the man of the moment, Rajat Patidar, after @RCBTweets' win over #LSG in Eliminator. ? ? - By @RajalArora
Full interview ? ? #TATAIPL | #LSGvRCBhttps://t.co/ofEtg6I3Ud pic.twitter.com/TG8weOuZUo
இந்நிலையில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ராஜட் படித்தரை புகழ்ந்து பேசினார்.
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ராஜட் படித்தாரின் அதிரடி ஆட்டத்தை குறித்து பேசிய கோலி,
“சர்வதேச போட்டிகளில் விளையாடாத ராஜட் படித்தார் முக்கியமான போட்டியில் அழுத்தத்திற்கு மத்தியில் சதம் விளாசியுள்ளார். இத்தகைய சிறப்பான இன்னிங்ஸை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.