‘கோலிக்காக வந்துள்ளேன்...’ - ஸ்டேடியத்தில் பதாகையுடன் நின்ற பாக். ரசிகை - வைரலாகும் புகைப்படம்

Virat Kohli Cricket Indian Cricket Team Viral Photos
By Nandhini Sep 05, 2022 10:24 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்காக ஸ்டேடியத்திற்கு பதாகையுடன் வந்த பாகிஸ்தான் ரசிகையின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் த்ரில் வெற்றி

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.

virat-kohli-pakistan-fan-viral-photo

வீராட் கோலிக்காக வந்த பாக். ரசிகை

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய போட்டியை பாகிஸ்தானிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் ரசிகர், ரசிகைகள் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருந்து ஒரு ரசிகை பதாகையுடன் நின்றுக் கொண்டிருந்தார். அந்த பதாகையில், நான் கோலிக்காக இங்கே வந்துள்ளேன் என்று பதாகையை காட்டிய அப்பெண்ணின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.