சிறிய தவறால் தேவையில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்த விராட் கோலி

Virat Kohli Test Match Out Ind Vs Nz
By Thahir Dec 05, 2021 04:20 PM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியில் அதிகபட்சமாக மாயன்க் அகர்வால் 150 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 52 ரன்களும், சுப்மன் கில் 44 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக மாயன்க் அகர்வால் 62 ரன்களும், புஜாரா மற்றும் சுப்மன் கில் தலா 47 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி, 37 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து மிகப்பெரும் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.