கோலியை விட ரோஹித் திறமை சாலி...பாகிஸ்தான் வீரர் கருத்து!
ரோஹித் சர்மாவிடம் இருக்கும் திறமை விராட் கோலிக்கு இல்லை என்று பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 261 ரன்கள் என்ற உலக சாதனை, இரட்டைச் சதங்கள், டி20 போட்டியில் சதங்கள், கடந்த உலகக்கோப்பையில் 5 சதங்கள் என்று ஹிட்மேன் அசத்தி வருகிறார்.
விராட் கோலி கடந்த 3 ஆண்டுகளாக சதம் எடுக்கவில்லை, அதிகபட்சமாக 74 ரன்களை தென் ஆப்பிரிக்காவில் எடுத்தார், பிறகு அவரது ஆட்டம் சரியாக அமையவில்லை, ரோஹித் சர்மாவின் கிராஃப் ஏறிக்கொண்டே போகிறது, கோலியின் கிராஃப் இறங்கிக் கொண்டே இருக்கிறது.
விராட் கோலி
இந்நிலையில் இமாம் உல் ஹக் கூறியதாவது: “ரோஹித் சர்மாவிடம் இருக்கும் திறமை விராட் கோலிக்கு இல்லை என்று நான் உணர்கிறேன். அவர்கள் இருவரும் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் ரோஹித் விளையாடும் விதம், அவர் ரீப்ளேயில் பேட்டிங் செய்வது போல் உணர்கிறேன். பந்துகளை ஆடுவதில் ரோஹித் சர்மாவுக்கு அதிக நேரம் இருப்பது போல் உணர்ந்தேன்.
பாகிஸ்தான் வீரர்
நான் பாயிண்டில் நின்று பீல்ட் செய்த போது முதல் முறையாக டைமிங் பற்றி அறிந்தேன். விராட் கோலி, ரோஹித் இருவரும் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன், ரோஹித் சர்மா ஒரு வரப்பிரசாத வீரர்.
விநாடிகளில் போட்டியையே மாற்றி விடுவார் ரோஹித் சர்மா. செட் ஆகிவிட்டால் அவ்வளவுதான் தன் இஷ்டத்துக்கு அடித்து நொறுக்குவார் ரோஹித் சர்மா.” என்கிறார் பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக்.