வெறித்தனம் வெறித்தனம் : அதிக ரன் எடுக்க காரணம் தெரியுமா ? கோலி சொன்ன சீக்ரெட்

Virat Kohli Team India
By Irumporai Mar 14, 2023 07:18 AM GMT
Report

அஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது விளையாட்டுத்திறன குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

 இந்தியா vs ஆஸ்திரேலியா

இந்தியா , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி சமனாக முடிந்தது ஆனாலும் இந்த தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்தியா கோப்பையினை வென்றது. குறிப்பாக 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் விராட் கோலி 186 ரனக்ள் குவித்தார்.இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி தனது ரன்கள் குறித்து பேசிய வீடியோவினை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய விராட் கோலி .

அதிக ரன் எடுக்க காரணம்

இந்த போட்டியில் நான் சிறப்பான முறையில் விளைய்ட்டியுள்ளேன் என்பது எனக்கு தெரியும் , உண்மையினை சொல்லவேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தை சரியாக பயனபடுத்தினேன்.

மேலும் நான் பேட்டிங் செய்யும் போது நிதானமாகவும் அதே சமயம் நம்பிக்கையுடனும் விளையாடிகிறேன் இதனால் பந்து சற்று தடுமாறும் போது அதிக ரனகளை பெற முடிகின்றது, அதே சமயம் ஆஸ்திரேலிய ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது எனக் கூறியுள்ளார்.