ஆரம்பிக்கவேயில்ல அதுக்கு முன்னாடியேவா.. ஆர்சிபிக்கு அடிக்கு மேல் அடி!

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2023
By Sumathi Mar 31, 2023 07:12 AM GMT
Report

ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே சோக காலம் ஆரம்பித்துவிட்டது.

ஆர்சிபி 

ஆர்சிபிக்கு பக்க பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட், ஐபிஎல் தொடக்க போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கவேயில்ல அதுக்கு முன்னாடியேவா.. ஆர்சிபிக்கு அடிக்கு மேல் அடி! | Virat Kohli Open For Rcb In Ipl 2023

பிற்பகுதியில் ஹேசில்வுட் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது அவரின் உடல்நிலை சூழலை அவதானித்தபிறகு இதனை உறுதி செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னடைவு 

இந்நிலையில், அண்மையில் காயத்தில் இருந்து குணமடைந்து ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல் இப்போது பிட்டாக இல்லையாம். அதனால் அவர் தொடக்க சில போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு விளையாடமாட்டார் எனவும் கூறப்படுகிறது.

ஆரம்பிக்கவேயில்ல அதுக்கு முன்னாடியேவா.. ஆர்சிபிக்கு அடிக்கு மேல் அடி! | Virat Kohli Open For Rcb In Ipl 2023

இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஆர்சிபி பெங்களூரு அணி தங்களின் முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆரம்பிக்கவேயில்ல அதுக்கு முன்னாடியேவா.. ஆர்சிபிக்கு அடிக்கு மேல் அடி! | Virat Kohli Open For Rcb In Ipl 2023