ரஹானேவுக்கு இனி இடமில்லையா? - விராட் கோலி சொன்ன தகவலால் பரபரப்பு

viratkohli ajinkyarahane
By Petchi Avudaiappan Dec 07, 2021 12:16 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன்  ரஹானே தொடர்ந்து மிக மோசமாக செயல்பட்டு வருவது குறித்து தனது கருத்தை கேப்டன் விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிய,2வது டெஸ்டில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்தநிலையில் 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலியிடம் தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானே குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. 

அதற்கு அவர், ரஹானேவின் தற்போதைய ஃபார்மில் என்னால் தலையிட முடியாது. நான் மட்டும் இல்லை யாருமே அதில் தலையிட கூடாது. ரஹானேவை தனது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த வீரர்களுக்கு ஆதரவாக இருப்பது தான் எங்களது கடமை. ஓரிரு போட்டிகளில் சொதப்பிவிட்டாலும் மக்கள் மிக கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிடுகின்றனர்.

அடுத்தது என்ன..? என கேள்வி எழுப்பும் சில இவருக்கு பதிலாக இவரை எடுங்கள் என அறிவுரையும் வழங்குகின்றனர். ஆனால் அதற்காக எல்லாம் அணியில் மாற்றத்தை செய்து கொண்டே இருக்க முடியாது. சிலரால் பரிந்துரைக்கப்படும் வீரர்களே வெறும் இரண்டு மாதத்திற்குள் அவர்கள் விமர்ச்சனத்திற்கும் உள்ளாகுகின்றனர் என தெரிவித்துள்ளார்.