கவணத்தை ஈர்க்கும் விராட் கோலியின் புதிய ட்விட்டர் பதிவு ; என்ன சொல்ல வருகிறார்? நீங்களே பாருங்க
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் புதிய ட்விட்டர் பதிவு தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் தோல்விக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது.
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா அணி விளையாட உள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 6-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் மீண்டும் பயோ பபுளில் இணைய உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கண்ணாடியில் அவருடைய முகத்தை பார்ப்பது போன்ற புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “எப்போதும் உனக்கு நீ தான் போட்டி” என்ற வாசகத்தை சேர்த்துள்ளார். அவரின் இந்தப் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது.
Its always you vs you. pic.twitter.com/9zBG8O95Qp
— Virat Kohli (@imVkohli) January 30, 2022
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக விராட் கோலி இப்படி ஒரு பதிவை போட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.
சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! IBC Tamil