“ரோகித் ஷர்மாவுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை, அவர் தலைமையில் ஆட தயார்" - விராட் கோலி விளக்கம்
தென்னாப்பிரிக்கா தொடரை விராட் கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்திய அணியில் 3 வகை கிரிக்கெட் தொடரிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும்,
தான் அணியில் ஒரு வீரராக டி20 போட்டியில் ஆடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அனைவரும் எதிர்பார்த்தது போல ரோகித் ஷர்மா டி20 கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஒருநாள் போட்டியின் கேப்டனாகவும் ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்தது.
இதனால் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகப்போவதாகவும், இதனை எதிர்ப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வந்தன.
விராட் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் விராட் கோலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதை தேர்வு குழு என்னிடம் கூறியது.
ஒருநாள் போட்டி தொடருக்கான வீரர்கள் தேர்வில் நானும் இருக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க நான் விரும்பவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் ஷர்மா தலைமையில் விளையாட தயார்” என்றார்.
மேலும் அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ரோகித் ஷர்மாவுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை என்று கூறியுள்ளார்..