டி20 தொடரில் இருந்து விராட் கோலி விலகல் - காரணம் புரியாமல் முழிக்கும் ரசிகர்கள்
இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து விராட் கோலி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டி20 தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக இந்தியா வரும் இலங்கை அணி இந்திய அணியுடன் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விராட் கோலி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அணிக்கு எதிராக விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளார். இதில் தனது 72வது சதத்தை பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில் டி20 தொடரில் அவர் விலகவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேசமயம் இலங்கை தொடரில் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.