‘கே.எல் ராகுல் தேவையில்லை...இவரை களமிறக்குங்கள்’ - சுனில் கவாஸ்கரின் யோசனை

virat kohli T20 worldcup sunil gavaskar
By Petchi Avudaiappan Sep 13, 2021 06:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கணிப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்குவதற்கு பதில் விராட் கோலி களமிறங்கி விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும் என்றும், ஆட்டத்தின் சூழலை பொறுத்து மற்ற வரிசை பேட்ஸ்மேன்களையும் மாற்றலாம் என்றும் அவர் கூறியுள்ளார்