"ஏ பல்லே லக்கா, மெட்ராசுக்கா திருச்சிக்கா.. தென்னாப்பிரிக்கா" - இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவில் உற்சாக வரவேற்பு

south africa virat kohli indian team reaches led
By Swetha Subash Dec 17, 2021 06:57 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் வரும் 26-ந் தேதி அந்த நாட்டில் உள்ள செஞ்சூரியன் நகரின் மைதானத்தின் டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித்தொடர்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஆட உள்ளது.

இந்த தொடருக்கான விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அதிகாலை இந்தியாவில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு நேற்று இரவு தென்னாப்பிரிக்காவைச் சென்றடைந்தது.

விமான பயணத்தின்போது இந்திய வீரர்கள் எடுத்த வீடியோவை பி.சி.சி.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் விமானத்தில் அமர்ந்திருக்கும் ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா, விமானத்தில் அங்குமிங்கும் நடக்கும் விராட்கோலி ஆகியோர் உள்ளனர்.

இஷாந்த் சர்மா விராட் கோலியிடம் ஹிந்தியில் பேச, ஸ்ரேயாஸ் அய்யரும், ராகுல் டிராவிட்டும் சிரித்துக் கொண்டே பேசி வருகின்றனர்.

பின்னர், தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணியை அந்த நாட்டு சார்பில் நடனம் ஆடி, பாட்டுப்பாடி வரவேற்றனர்.

இந்திய வீரர்கள் அனைவரும் முழுமையாக முகத்தை மறைக்கும் கண்ணாடி முகக்கவசம் அணிந்து விமான நிலையத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.

விமானத்தில் ரஹானே, புஜாரா விமானத்தில் பறக்கிறோம் என்பது போல சைகை காட்டுகின்றனர். விமான நிலையத்தில் ஆடுபவர்களைப் போலவே ஸ்ரேயாஸ் அய்யரும் நடனம் ஆடுகின்றனர்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சல் அணியில் இடம்பிடித்துள்ளார்.