நான் அவுட்டே இல்லை...கோபத்தில் மைதானத்தில் விராட் கோலி செய்த செயல்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் எதிர்பாராதவிதமாக நடுவர் அவுட் கொடுத்ததால் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி கடும் கோபமடைந்தார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து பேட் செய்த பெங்களூரு அணி கேப்டன் டூபிளெசிஸ் 16, விராட் கோலி 48, அனுஜ் ராவத் 66 ரன்கள் குவிக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி எல்.பி.டபிஎள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டெவால்ட் பிரெவிஸ் வீசிய பந்து வீச்சில் அவர் ஆட்டமிழக்க ரிவியூ கேட்கப்பட்டது.
ரீப்ளேவில் பார்க்கும்போது பந்து பேட்டில் பட்டு பேடில் பட்டதுபோல தெரிந்ததால் கோலியும் இதை அவுட் இல்லை என உறுதியாக நம்பினார். ஆனால் 3வது நடுவர் அவுட் கொடுக்க இதனால் கடும் அதிருப்தியடைந்த கோலி பேட்டை தரையில் ஓங்கி அடித்தப்படி பெவிலியன் திரும்பினார்.
— Addicric (@addicric) April 9, 2022