விராட் கோலியை துாக்கி போடுங்க..இந்த வீரர்களை களம் இறக்குங்க - முன்னாள் வீரர் கருத்து
டி.20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை தான் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை போட்டி இன்று முதல் தொடங்கயிருக்கிறது.இந்த முதல் நாள் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.
டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வரும் முன்னாள் வீரர்கள் பலர், இந்திய அணிக்கான தங்களது ஆலோசனையையும் வழங்குவதோடு,
டி.20 உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்கள் மற்றும் கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா,
டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல் ராகுலும் தான் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், 'இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பற்றி பேசினால் அதில் எழும் முதல் கேள்வி யார் துவக்க வீரர் என்பது தான்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் துவக்க வீரர்களாக களமிறங்கிய போது கே.எல் ராகுலால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை.
கே.எல் ராகுல் தற்போது சிறப்பான பார்மில் உள்ளார், எனவே அவரை பயன்படுத்தி கொள்வதே இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக சொல்ல வேண்டுமெறால் கே.எல் ராகுல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை விட சிறப்பாக ரன் குவித்து வருகிறார்.
எனவே என்னை பொறுத்தவரையில் கே.எல் ராகுலும், ரோஹித் சர்மாவும் தான் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும். விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்க வேண்டும்.
சூர்யகுமார் யாதவை இந்திய அணி எப்படி பயன்படுத்த போகிறது என்பதை பார்க்க நானும் ஆவலுடன் காத்துள்ளேன்.
ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை பார்க்க காத்துள்ளேன்' என்று தெரிவித்தார்.