இந்தியா வெற்றி... - குத்தாட்டம் போட்ட விராட்கோலி, இஷான் கிஷன்... - வைரலாகும் மாஸ் வீடியோ...!

Virat Kohli Viral Video Indian Cricket Team Ishan Kishan
By Nandhini Jan 13, 2023 02:09 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 

குத்தாட்டம் போட்ட விராட்கோலி, இஷான் கிஷன்

நேற்று நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேற்று போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் விராட் கோலி, இஷான் கிஷன் ஜாலியாக குத்தாட்டம் போட்டுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

virat-kohli-ishan-kishan-cricket-team-viral-video