“விராட் கோலி விலகலா... யார் சொன்னா?” - கடுப்பான பிசிசிஐ

rohit sharma BCCI Viratkohli
By Petchi Avudaiappan Sep 13, 2021 10:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணியின் புதிய கேப்டன் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டில் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

அவருக்கு அடுத்தாக ரோகித் ஷர்மா இந்தியாவின் டி20 கிரிக்கெட் கேப்டனாக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர். இந்த மாற்றம் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இருக்கும் எனவும் கூறப்பட்டது.

இதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால், இதெல்லாம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இது ஒரு வதந்தி. அவ்வளவு தான். கேப்டன் பொறுப்பு விவகாரம் குறித்து எதுவும் கலந்தாலோசிக்க படவில்லை.

மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் கோலி தான் இந்திய அணியின் கேப்டன் என தெரிவித்துள்ளார்.