எல்லா பிரச்சனைக்கும் ஒரு கப் காஃபி போதும் - மனம் திறந்த விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
விராட் கோலி
டி20 உலக கோப்பையில், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளிலும் கேப்டன் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டார். நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதற்காக அவரது ரசிகர்கள் விகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நீண்ட நாளுக்குப் பின் இதுகுறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், "ஒரு விளையாட்டு வீரரைப் பொறுத்தவரை, போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் தான் தங்களின் திறமையை வெளி கொண்டு வரமுடியும்.
போட்டிகளில் முழுகவனம்
போட்டிகளில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும் போது, அது தங்களது உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும், அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு விடலாம் என்று முயற்சி செய்யலாம் என்ற போது அது நம்மைப் பிரித்து விடும் வாய்ப்புகளும் உள்ளது.
உடற்தகுதி, மற்றும் மனவுறுதியில் அதிகப்படியான கவனம் செலுத்துவது சிறப்பான விளையாட்டு வீரராக இருக்கப் பெரிதும் உதவும். போட்டிகளில் முழு கவனத்தைச் செலுத்தி, முன்னணி வீரர்களின் கருத்துக்களைக் கேட்டுத் திறம்படச் செயல்படுவது முக்கியமான விஷயம் ஆகும்.
தனிமை- வலிமை
என்னை ஆதரிக்கும், நேசிக்கும் நண்பர்கள் என் அருகிலிருந்த போதும் நான் தனிமையில் இருப்பதை உணர்ந்துள்ளேன். இது போன்ற சூழ்நிலை அனைவருக்கும் ஏற்படும் என்று நினைக்கிறேன். இது மாதிரியான தருணங்களில் தங்களுக்கான தனிப்பட்ட நேரங்களை ஒதுக்கி,
சிந்தித்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள். இதைச் செயல்படுத்த தவறினால் இக்கட்டான சூழ்நிலைக்குச் செல்ல நேரிடும். சரியான செயல்களுக்குத் தனிப்பட்ட நேரங்களை ஒதுக்குவது, நம்மை வலிமைப் படுத்த உதவும்.
காபி-அலாதி ஆர்வம்
எவ்வளவு பயிற்சியிலிருந்தாலும், ஓய்வுக்கு என்று சில நேரங்களை ஒதுக்குவது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். நெருக்கடியான சூழ்நிலைகளில் என் குடும்பத்துடன் இருப்பதை விரும்புகிறேன். அதே வேளையில் என் பொழுதுபோக்கிற்கான விஷயங்களையும் தொடர்ந்து பின்பற்றுவேன்.
பயணமும், பயணத்தின் போது காபி குடிப்பதும் இனிமையான தருணங்களில் ஒன்று. காபி குடிக்கும் போது பல விஷயங்களை எளிதில் கடந்து சென்றிருக்கிறேன், காபியை ருசிப்பதில் எனக்கு அலாதி ஆர்வம் உண்டு", என கூறியுள்ளார்.