Wow... விராட் கோலிக்கு சிறந்த வீரருக்கான விருது.. - ஐசிசி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள்
விராட் கோலிக்கு சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
சாதனை படைத்த விராட் கோலி
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இப்போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 64 எடுத்திருந்தார்.
இது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோலியின் 3வது அரைசதமாகும். டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 1017* ரன்களை கடந்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பதிவிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
விராட் கோலிக்கு விருது - ஐசிசி அறிவிப்பு
இந்நிலையில், மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருதை ஐசிசி வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது.
இந்த வகையில் அக்டோபர் மாதத்தில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை விராட் கோலிக்கு வழங்க இருப்பதாக ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விராட் கோலிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Virat Kohli wins the ICC men's player of the month for October. pic.twitter.com/wyBRzcodgy
— CricTracker (@Cricketracker) November 7, 2022