“எப்போ பாத்தாலும் சேட்ட” - கலாய்த்த கோலி, கடுப்பான இஷாந்த் ; பிசிசிஐ வெளியிட்ட வீடியோ
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா புறப்பட்டனர்.
அப்போது, விமானத்தில் ஜாலியாக இருந்த கோலி, வீரர்களுடன் கலகலப்பாக உரையாடியுள்ளார்.
ஒவ்வொரு வீரரையும் கலாய்த்துக் கொண்டு செல்லும் அவர், இஷாந்த் ஷர்மாவிடம் சென்று உலகம் முழுவதும் சுற்றுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்துவிட்டார்.
அப்படி தானே? இஷாந்த் பாய் என நக்கலாக கேட்கிறார். இதற்கு சிரித்த முகத்துடன் கடுப்பான இஷாந்த், என்னை கலாய்க்காதே என சொல்லிவிடுகிறார்.
அவரின் பதிலைக் கேட்ட கோலிக்கு, சரிப்பை அடக்க முடியவில்லை. இப்படி, கலகலப்பாக இந்திய அணி ஒருவழியாக ஜோகனஸ்பெர்க் சென்றடைந்தது.
விராட் கோலி, இஷாந்த் உள்ளிட்டோரை கலாய்க்கும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
From Mumbai to Jo'Burg! ? ?
— BCCI (@BCCI) December 17, 2021
Capturing #TeamIndia's journey to South Africa ?? ✈️ ?? - By @28anand
Watch the full video ? ? #SAvINDhttps://t.co/dJ4eTuyCz5 pic.twitter.com/F0qCR0DvoF
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், கோலிக்கும் இடையே முட்டல் மோதல் இருக்கும் சூழலில், வீரர்களுடன் விராட் செம ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
முட்டல் மோதல் அணிக்கு வெளியே இருக்க வேண்டுமே தவிர, அது நாட்டுக்காக விளையாடுவதில் இருக்ககூடாது என்பதில் விராட் கவனமாக இருக்கிறார் என, இந்த வீடியோவை பார்த்த விராட் ரசிகர்கள் புகழ் மாலை சூட்டத் தொடங்கிவிட்டனர்.