வார்த்தைகளால் வம்பிழுத்தது ஏன்? விராட் கோலி விளக்கம்

India Cricket Virat Kohli INDvsENG
By Thahir Aug 27, 2021 09:36 AM GMT
Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட் தொடரில் தற்போது முன்னணியில் இருக்கும் இந்திய அணி இன்று நடைபெற இருக்கும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சந்திக்க இருக்கிறது.  

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் இங்கிலாந்து வீரர்கள் இடத்தில் அதிக ஆக்ரோஷத்துடன் ஈடுபட்டது குறித்த விளக்கத்தை தற்போது விராட் கோலி வெளிப்படையாக கூறியுள்ளார்.

வார்த்தைகளால் வம்பிழுத்தது ஏன்? விராட் கோலி விளக்கம் | Virat Kohli Indian Cricketer

டெஸ்ட் தொடரில் தற்போது முன்னணியில் இருக்கும் இந்திய அணி இன்று நடைபெற இருக்கும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சந்திக்க இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் இங்கிலாந்து வீரர்கள் இடத்தில் அதிக ஆக்ரோஷத்துடன் ஈடுபட்டது குறித்த விளக்கத்தை தற்போது விராட் கோலி வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவ்வாறு எதிர் அணி வீரர்களிடையே வார்த்தைகளை பரிமாறுவதன் மூலமாக ஆட்டத்தில் இன்னும் ஈடுபாடு வீரர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்றும் அது தனக்கு மனதளவில் நிறைய உற்சாகத்தை கொடுக்கும் என்றும் விராட் கோலி தற்பொழுது கூறியுள்ளார்.

மேலும் அவை மைதானத்தில் பேசப்படும் வார்த்தைகள் என்றும் அதை போட்டி முடிந்தவுடன் பெரிய அளவில் விமர்சனமாக்கி அலசி ஆராய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பேசிய விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எந்த வித மாற்றமும் கொண்டுவரப் போவதில்லை என்றும் அதே அணி வீரர்களுடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட போவதாகவும் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்திலும் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஒருவேளை அவர் விளையாட வைக்கப்பட்டால் ரவீந்திர ஜடேஜா வெளியே அமர வைக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றுமொரு ஸ்பின் பந்து வீச்சாளர் என அதே காம்பினேஷனை இன்றைய போட்டியிலும் விராட் கோலி செயல்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போன தாகூர் இன்றைய போட்டியில் விளையாட தயாராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.