அவர்கிட்ட மட்டும் சிக்கிடாதீங்க..சிதைச்சிடுவாரு..அச்சத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி
இந்திய அணியின் டாப் வீரர்களே திணறக்கூடிய வகையில் சூப்பர் வீரரை கைவசம் வைத்துள்ளது பாகிஸ்தான் அணி.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ள போட்டியென்றால் அது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்தான்.
இந்த போட்டி வரும் 24ம் தேதியன்று மாலை துபாயில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.
இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. இதனை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
இதனை சமாளிப்பதற்காக இந்திய அணியில் மிக வலுவான வீரர்கள் இருக்கும் போதிலும், அணியின் ஆணி வேரையே சாய்க்க கூடிய ஒரு பந்துவீச்சாளரை வைத்துள்ளது பாகிஸ்தான் அணி.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மிகவும் வலிமையானது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்கும்.
ஆனால் இந்திய அணிக்கு பலவீனமும் இதுதான். இந்த டாப் 4 வீரர்களும் வலதுகை பேட்ஸ்மேனாக உள்ளதால், இவர்களை சமாளிக்க பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அஃப்ரிடி உள்ளார்.
இவர் இதுவரை 30 டி20 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட் எடுத்துள்ளார். டெத் ஓவர்களில் கூட இவரின் எகானமி 8 ஆகதான் இருந்துள்ளது.
இடதுகை பந்துவீச்சாளர்களை சமாளிக்க இந்திய அணியில் பெரிதும் சிரமப்படுவார்கள். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் இதுவரை ரோகித் சர்மா 13 முறையும், சூர்யகுமார் யாதவ் 10 முறையும், விராட் கோலி 9 முறையும் விக்கெட்டை பறிகொடுத்துள்ளனர்.
எனவே இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை சரிக்க முன்கூட்டியே இவரின் தாக்குதல் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாஹீன் அஃப்ரிடியின் பந்துவீச்சை சமாளிக்க இந்திய அணியும் ஸ்பெஷல் பயிற்சியை எடுத்துள்ளது. இதற்காக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் லக்மன் மரிவாலாவை வலைப்பயிற்சி பவுலராக வைத்துள்ளது.
இதே போல ஐபிஎல்-ல் இந்தியாவின் அதிவேக வேகப்பந்துவீச்சாளாரான உம்ரான் மாலிக்கை நெட் பவுலராக வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உம்ரான் மாலிக் சுமார் 152.95 கிமீ வேகத்தில் பந்துவீசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
