கோலி இல்லை… இவர் இல்லாததால் தான் இந்திய அணி தோல்வியடைந்தது

India team Virat Kohli failed
By Thahir Jan 08, 2022 08:11 PM GMT
Report

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு இஷாந்த் சர்மா விளையாடாததும் ஒரு காரணம் என இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரான எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் ஜோன்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளதால், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணியின் இந்த தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை தேர்வாளருமான எம்.எஸ்.கே பிரசாத்தும் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தான தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து எம்.எஸ்.கே பிரசாத் பேசுகையில், “தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இஷாந்த் சர்மாவை மிஸ் செய்தது என கருதுகிறேன்.

இஷாந்த் சர்மா போன்ற உயரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது.

இது போன்ற ஆடுகளங்களில் இஷாந்த் சர்மா இல்லாமல் விளையாடக்கூடாது, உமேஷ் யாதவை விட இஷாந்த் சர்மாவிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11ம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.