எந்த கேப்டன் பதவியிலும் இருக்காதீங்க - விராட் கோலியை வலியுறுத்தும் பயிற்சியாளர்

India Cricket Captain Virat Kohli
By Thahir Sep 19, 2021 09:54 AM GMT
Report

சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த உலகக் கோப்பை டி20 தொடர் நடந்து முடிந்தவுடன், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எந்த கேப்டன் பதவியிலும் இருக்காதீங்க - விராட் கோலியை வலியுறுத்தும் பயிற்சியாளர் | Virat Kohli India Cricket Captain Post

வேலை சுமை அதிகமாக உள்ள காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த இந்த முடிவை எடுத்ததாகவும் விராட் கோலி குறிப்பிட்டு கூறியிருந்தார்.

இது சம்பந்தமாக பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில், விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தற்போது விளக்கம் கூறியுள்ளார்.

பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக வேண்டும் ராஜ்குமார் ஷர்மாவிடம் விராட் கோலி ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு கோப்பை வாங்கிக் கொடுக்காத காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் என்ற கேள்வி எடுத்து வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த கேப்டன். ஒரு கேப்டனை ஐசிசி தொடரில் எவ்வளவு கோப்பைகள் வாங்கினார் என்பதைப் பொறுத்து கணக்கிட முடியாது.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. அந்த சாதனைகளே அவர கேப்டன்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்.

தற்பொழுது விராட் கோலி ஒற்றை ஆளாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியாது.

அவருக்கு வேலை சுமை அதிகமாக இருந்து வந்த காரணத்தினால் டி20 போட்டியில் மட்டும் தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கூறியது மிகவும் சரி.

என்னைப் பொறுத்தவரையில் அவர் ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும். டி20 போட்டிகளில் அவர் ஒரு வீரராக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.

அப்படி அவர் விளையாடும் பட்சத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் வளர்ச்சி குறித்து நிறைய நேரங்களை செலவிட முடியும்.

எனவே இந்த முடிவைடும் அவர் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர். ஐபிஎல் மற்றும் உலக கோப்பை தொடருக்கு தயாராகிவரும் விராட் கோலி 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5 போட்டிகளில் வெற்றி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் சில நாட்களில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது.

எனவே இதை இரண்டு தொடரையும் தனது தலைமையில் தன்னுடைய அணிகள் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் கோலி தயாராகி வருகிறார்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி நாற்பத்தி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இருபத்தி ஏழு போட்டிகளில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றி அடைந்துள்ளது.

உலகக் கோப்பை டி20 தொடர் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி துவங்கப்பட்டு நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.